Tuesday, January 8, 2013

Pongal Festival

தைப்பொங்கல் வரலாறு 


                    சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை  பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள்  இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பைமுடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன் , உதவிய கால்நடை , போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

உழவர் திருநாள் 


பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் , தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள்  மழையின் உதவியால் ஆடி  மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில்  வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

நான்கு நாள் திருவிழா 

  முதல் நாள் போகி 
  • பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி  கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
  • போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

 தை பொங்கல் 

தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது

 மாட்டு பொங்கல் 

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

காணும் பொங்கல் 
   
           இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.

பொங்கல் வைக்கும் முறை 


தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர், தமிழ்நாடு  போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம்  இட்டு அதன் நடுவில் பானை வைப்பர்.புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலைவாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

Monday, December 31, 2012

Happy New Year 2013

















2013 Calender

ஜனவரி
திசெபுவிவெஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
பெப்ரவரி
திசெபுவிவெஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728
மார்ச்
திசெபுவிவெஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
ஏப்ரல்
திசெபுவிவெஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
2930
மே
திசெபுவிவெஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
ஜூன்
திசெபுவிவெஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
ஜூலை
திசெபுவிவெஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031
ஆகஸ்ட்
திசெபுவிவெஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031
செப்டம்பர்
திசெபுவிவெஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30
அக்டோபர்
திசெபுவிவெஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
நவம்பர்
திசெபுவிவெஞா
 123
45678910
11121314151617
18192021222324
252627282930
டிசம்பர்
திசெபுவிவெஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031


Tamil Nadu (India) – Holidays 2013
MonthDayWeek DayName
January1TuesdayNew Year Day
January14MondayPongal Festival
January15TuesdayThiruvalluvar Day
January16WednesdayUzhavar Thirunal
January25FridayMilad-Un-Nabi ( Id-E-Milad )
January26SaturdayRepublic Day
March29FridayGood Friday
April1MondayAnnual Closing of Bank’s Accounts
April11ThursdayTelugu New Year’s Day/Ugadi
April14SundayTamil New Year’s Day and Dr. B.R.Ambedkar’s Birthday
April24WednesdayMahaveer Jayanthi
May1WednesdayMay Day
August9FridayId-Ul-Fitr
August15ThursdayIndependence Day
August28WednesdaySri Krishnashtami
September9MondayGanesh Chaturthi
September30MondayHalf year closing day
October2WednesdayMahatma Gandhi Jayanthi
October13SundayAyutha Pooja
October14MondayVijaya Dashami
October16WednesdayBakri Id ( Idul Zuha )
November2SaturdayDiwali
November14ThursdayMuharram
December25WednesdayChristmas